செங்கலடியில் குடிசன  மதிப்பீடுகளை மேற்கொள்ளல்  தொடர்பான  கருத்தரங்கு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   ஏறாவூர்பற்று செங்கலடி  பிரதேச செயலகத்தில் இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடுகளை மேற்கொள்ளல்  தொடர்பான பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு   (7) செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளரும் பிரதி தொகை மதிப்பு ஆணையாளருமான கோ.தனபாலசுந்தரம் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வு  புள்ளி விபரவியலாளரும் பிரதி தொகை மதிப்பு அத்தியேட்சகருமான ரி.ஜெய்த்தனன் மற்றும்  உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் ஆகியோரின் தலைமை மற்றும் வழிகாட்டலின் கீழ், பிரதேச செயலக புள்ளி விபரவியல் உத்தியோகத்தர் எம். எஸ். எம். றூமியின்  ஏற்பாட்டில் இடம்பெற்றது.இதன்போது இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடுகளை மேற்கொள்ளல்  நிகழ்ச்சித் திட்டத்தின்  முதற்  கட்டமாக பிரதேசத்திலுள்ள கட்டிடங்களை நிரற்படுத்தல் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின்  அபிவிருத்தி, கிராம சேவை மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகள்  சார்ந்த சகல  உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.