திருமணமாண புதுமணத்தம்பதிகள்  உயிரிழப்பு.

(எம்.ஏ.ஏ.அக்தார்) ஹம்பாந்தோட்ட- வீரகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்ற திருமணம் முடித்து ஒரு வாரமே ஆகிய புது மணச்தம்பதிகள் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக சம்பவம் இப்பிரதேசத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை  இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையோரத்திரத்திலிருந்த மரத்துடன் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
31 வயதுடைய கணவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.