கூடைப்பந்தாட்ட தேசியமட்ட போட்டிக்கு காரைதீவு அணி தெரிவு!

( வி.ரி. சகாதேவராஜா)   தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக மாவட்ட மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் காரைதீவு  மைதானத்தில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்றது..
இப்போட்டிகளில் இறுதி போட்டியில் காரைதீவு பிரதேசசெயலக பிரிவு அணி கல்முனை வடக்கு பிரதேச செயலக அணியுடன் மோதியது.
அதில் காரைதீவு அணி வெற்றி பெற்றது. அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ள அவ் அணி தெரிவு செய்யப்பட்டது.
 காரைதீவு அணி சார்பாக ராமகிருஷ்ணா இளைஞர் அணியினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. .
 இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு அணியினர் பெற்றுகொண்டனர்.
காரைதீவு இராமகிருஷ்ண இளைஞர் அணி ஏலவே ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியிலும் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தெரிவானது குறிப்பிடத்தக்கது.