ஹஸன் மௌலவி பவுண்டேஷன் மற்றும் அஸீஸா பவுண்டேஷன் இணைந்து உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

ஹஸன் மௌலவி பவுண்டேஷன் மற்றும் அஸீஸா பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மட்டக்களப்பு – ஏறாவூரிலுள்ள பள்ளிவாயல்களின்  இமாம்கள், முஅந்தின்மார்கள் மற்றும்   மௌலவிமார்கள்  225 பேருக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிய நிகழ்வு ஏறாவூர் முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் 10.09.2023 நடைபெற்றது.
ஜம்இய்யது உலமா சபையின் புதிய தலைவர் மௌலவி ஏஎல் ஸாஜித் ஹுஸைன் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான எம்எஸ். சுபைர் , குறித்த நிறுவனங்களின் பணிப்பாளர் சாதிக் ஹஸன் மற்றும் பிரதிநிதி முகமட் றிஸான் ஆகியோர் அதிதிகளாகக்கலந்துகொண்டு உலருணவுப்பொதிகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.இதன்போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான எம்எஸ். சுபைர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு உலருணவுப்பொதிகளை  வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


(ஏறாவூர் நிருபர் – நாஸர்)