அம்பிளாந்துறை கலைமகள் மாகாணத்தில் முதலிடம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய பெண்கள் அணி காற்பந்தாட்ட போட்டியில் முதலிடத்தினைப் பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20வயது பிரிவிற்குட்பட்ட பெண்கள் அணிக்கான காற்பந்தாட்டப் போட்டியிலேயே இச்சாதனையை அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அணி புரிந்துள்ளது.