திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு அரசாங்க அதிபர் விஜயம்.

(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)  அம்பாரை மாவட்டம திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்கிரமசிங்க அவர்கள் கள விஜயம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தார்.

திருக்கோவில் பிரதேசத்திற்கு முழுநாள் விஜயம் ஒன்றினை முன்னெடுத்து இருந்த மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலகத்தினால் பொது மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அலுவலக நடைமுறைகள் தொடர்பாகவும் பார்வையிட்டு கொண்டு இருந்தார்.

இவ்விஜயத்தின் போது பொது மக்களுக்கு காணி அளிப்பு பத்திரங்கள் விவசாயிகளுக்கு நீர் இரைக்கும் இயந்திரம் சமுர்த்தி பயனாளி குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான நிதியுதவிகள் சிறுவர் மகளிர் பிரிவின் உடாக விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் போன்ற பல்வேறு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்று இருந்தன இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்கரமசிங்க அவர்கள். அம்பாரை மாவட்டத்தில் சிறந்த ஒரு பிரதேச செயலகமாக திருக்கோவில் பிரதேச செயலகம் காணப்படுவதுடன் அதற்காக இரண்டு தேசிய விருதுகள் கிடைக்கிப் பெற்று இருப்பது பாராட்டுதலுக்குரிய விடயம் ஆகும்.

அந்தவகையில் திருக்கோவில் பிரதேச மக்களுக்கான முறையான நேர்த்தியான அபிவிருத்திப் பணிகளை  பிரதேச செயலாளர் கஜேந்திரன் தலையில் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வருகின்றமையிட்டு பாராட்டுவதுடன் நாம் பொது மக்களின் பணத்தில் வாழ்ந்து வருகின்றோம்
அதனால் எமக்கு முதலாளிகள் பொது மக்கள் தான் எனவே தொடர்ந்தும் பொது மக்களுக்கான பணிகளை விசுவாசத்துடன் நேர்மையாக முன்னெடுத்தச் செல்லுமாறு கேட்டுக் கொண்டு இருந்த அதேவேளை கிராங்களுக்கும் விஜயம் செய்து பொது மக்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதேவேளை இலங்கை சமூக பாதுகாப்பு சபையிக்கான அதி கூடிய அங்கத்தவர்களை இணைத்துக் கொண்ட உத்தியோகத்தர்களுக்கு நினைவுப் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வாது திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் தலைமையில் இடம்பெற்று இருந்ததுடன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உற்பட அனைத்து பிரிவுத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு இருந்தனர்.