மட்டு ஓமனியாமடுவில்  ஆண் ஒருவர் சடலமாக மீட்பு.

Dead body of woman covered by white sheet

(கனகராசா சரவணன்)   மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் மாட்டுபட்டி பகுதியில் மாட்டு மேய்க்க சென்ற ஆண் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கிண்ணியடி விஷ;னுகோவில் வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய கந்தையா மாமாங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஓமனியா பகுதியிலுள்ள அமைக்கப்பட்டிருக்கும் மாட்டுபட்டிக்கு மாடுகளை மேய்பதற்காக குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து மாட்டு பட்டிக்கு  சென்றவர் இன்று காலையாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து மாட்டுபட்டியின் உரிமையாளர் அந்த பகுதிக்கு சென்று அவரை தேடியபோது மாட்டுபட்டிக்கு  அருகிலுள்ள பகுதியில் உயிரிழந்த நிலையல் சடலமாக கிடப்பதை கண்டு பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் தடவியல் பிரிவு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவந்ததுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெற்று வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்