மட்டக்களப்பு – கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பான ஊடக சந்திப்பு!

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் 14ஆவது இலங்கை அரசு பல்கலைக்கழக இடையிலான விளையாட்டு நிகழ்வு தொடர்பான ஊடக சந்திப்பு இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுடவர்களில்  இருவர் கருத்து தெரிவித்தனர்.

01. பேராசிரியர் வைத்தியகலாநிதி வ.கணகசிங்கம்.
உப வேந்தர் கிழக்கு பல்கலைக்கழகம்.

02. பேராசிரியர் ஈ.கருணாகரன்.
உப – உப வேந்தர் கிழக்கு பல்கலைக்கழகம்.

இதன் போது கருத்து தெரிவித்த கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் வ.கணகசிங்கம்…

இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14வது விளையாட்டுப் போட்டி நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடாத்துவதில் நாம் பெருமை அடைகிறோம்.

இந்நிகழ்வானது செப்டம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஆறாவது நாட்களாக வெற்றிகரமாக இடம்பெற்றுக்கொன்டுள்ளது.

இலங்கை அரசு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்வானது 3 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் மாபெரும் நிகழ்வாகும். இந்நிகழ்வானது இலங்கையின் 16 அரசு பல்கலைக்கழகங்களின் சுழற்சி முறையில் தலைமை தாங்கி நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த உன்னதமான நிகழ்விற்கான போட்டி தொடரின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 24 விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. இதன் இறுதிப் போட்டியில் எதிர்வரும் 8ம்திகதி சுமார் 6000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளது.

இவ் அனைத்து போட்டிகளும் கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், கல்லடி சிவானந்தா, மைதானம், மியானி தொழில்நுட்பக் கல்லூரி, கல்லடி கடற்கரை, மட்டக்களப்பு பேப்பர் மைதானம் உள்ளடங்களாக பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வின் நோக்கம் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி சாரா செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்களின் தனித்தன்மையை இனம் காண்பதே, எதிர்காலத்தில் நல்லதொரு காலமொன்றை அமைப்பதற்கும் பெரிதும் உதவியாக இது இருக்கும்.
அதேபோல வெளிப்புற பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் வாழ்வியல் சமூகவியல் கலாச்சாரம் பற்றிய தெளிவு ஊட்டல் வழங்கவும் இது வழி வகுக்கின்றது. மாணவர்களுக்கிடையிலான நட்பு ரீதியான நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு உறுதுணையாக உள்ளது.

தற்போது இடம்பெறும் விளையாட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் பல அதிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

24 போட்டிகளைக் கொண்ட நிகழ்வில் 18 போட்டிகள் இதுவரை முடிவடைந்துள்ளது.

இதுவரை 1ம் 2ம் 3ம் இடங்களை ஸ்ரீஜயவர்த்தன பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகிய பெற்றுள்ளதுடன் 8ம் , 9ம் இடத்தினை முறையே கிழக்கு பல்கலைக்கழகமும், யாழ் பல்கலைக்கழகமும் பெற்றுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு பல்கலைக்கழக உப – உபவேந்தர் ஈ.கருணாகரன் ..

அனைந்து பல்கலைக்கழகங்களும் இப் போட்டியில் பங்குபெறுகின்றன.
மட்டக்களப்பை பொறுத்தவரையில் டெனிஸ் , கூடைப்பந்து , உதைப்பந்தாட்டம் எல்லே உள்ளக விளையாட்டுக்களுக்கான வழம் இங்குள்ளது.
கடற்கரை கரப்பந்தாட்டமும் இடம்பெறுகிறது.
இதை பார்ப்பவர்கள் தரமான நிகழ்வாகவே உணர்வதாகவே தெரிவித்தனர்.

அத்தனை பொறுப்பாளர்களும் பீடங்களும் இவற்றிகு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

திருகோணமலை வளாகத்திலும் போட்டி நிகழ்வு இடம்பெறுகிறது.
பல வீரர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகவுள்ளனர்.