விபுலானந்தாவில் தெரிவான மருத்துவ பொறியியல் மாணவர் சந்திப்பு.

( வி.ரி. சகாதேவராஜா)   2022 ஆம் ஆண்டிற்கான கபொத. உயர்தரப்பரீட்சையில் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்கள் நேற்று  பாடசாலைக்கு வருகை தந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
 அதன்போது அம்மாணவர்களை பாடசாலை அதிபர் எம்.சுந்தரராஜன் பாராட்டிக் கௌரவித்தார்.
மருத்துவத்துறைக்குத் தெரிவான
எம்.குவேந்திரன்-3A
ஜி.அக்ஷயி – 3A ,
பொறியியல்துறைக்குத் தெரிவான
ஏஸ்.கிதுஷாந்த்.3A
பி.அனோஜா-  A,2B
ஐ.திலக்ஷினி – 3B ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சந்திப்பில் கணிதவிஞ்ஞான துறை பகுதித் தலைவர் பி.கேதீஸ் ஆசிரியர் உடனிருந்தார்.
கடந்த முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சையிலும் 4 பேர் மருத்துவத் துறைக்கும் ஒருவர் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.