கிண்ணியா மஹ்ரூப் கிராமத்தில் பொது விளையாட்டு மைதானத்துக்கான காணியை அடையாளப்படுத்தல்.

கிண்ணியா விளையாடுக் கழகங்களின் வேண்டுகோளுக்கமைவாக நீண்ட காலமாக மஹ்ரூப் கிராமத்தில் பொது விளையாட்டு மைதானம் இல்லாமல் இருந்தது பெரும் குறையாக இருந்துவந்துள்ளது. அதனை நிவர்த்தி செய்து பொது விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான காணியை அடையாளப்டுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்காக திங்கட்கிழமை (04) அப்பிரதேசத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் விஜயம் செய்தார்.

மேலும் அங்குள்ள விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடி உரியகாணி் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.