கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 90 ஆண்டுகளுக்குப்பிறகு நடந்த அதிசயம்.

    வேதாந்தி

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 90 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டுமொரு அதிசயம் நடந்தேறியுள்ளது.

இன்று மாலை 4.00மணிக்கு ஆரம்பமான தேரோட்டநிகழ்வில் பிள்ளையார் தேரும் சித்திரத்தேரும் வீதிவலம்வருவது வழமை . இத்தேர்தல்களில் வடம்பொருத்தி வடத்தின் ஊடாக பக்தர்கள் தேரினை இழுத்துச்செல்வார்கள்.

ஆனால் இவ்வாண்டு  சித்திரத்தேரில் பொருத்தப்பட்டிருந்த வடம் ஆறுதடவைகன் அறுந்ததுடன் சித்திரத்தேர் ஓடாமல் நின்றுள்ளது. அதன்பின் வரலாற்றில் முதல்தடவையாக 5 வடங்கள் பூட்டிய பின்பே தேர் வீதிவலம் வந்துள்ளது.

இதேபோன்று முன்பு இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக ஊர்பெரியார்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது 1920களில் தேர் ஆலயத்தைவிட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும், 1933இல்  உள்வீதியில் வலம்வந்த இருதேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும்  மூன்று நாட்களுக்குப்பிறகு படுவான்கரை ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாக தெரிவிக்கின்றனர்.

இன்று நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு பீதியினை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஏதோவொரு தெய்வக்குற்றம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.