யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி  ஆரம்பம்.

(எம்.எம்.ஜெஸ்மின்)  வடமாகாண மக்களின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு இலங்கையின் பல பாகங்களிலும் சந்தை வாய்ப்புகளை உருவாக்கி உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பவற்றின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இக் கண்காட்சி கடந்த வெள்ளிக் கிழமை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
முதல்நாள் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண,  கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர,  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையிலுள்ள 20 தொழில் நிறுவனங்களின் 300 இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்கள் இங்கு அமையப் பெற்றிருந்தன.
புத்தாக்கங்கள்,  புதிய தொழில்நுட்பம் என்பவற்றை இக் கண்காட்சியின் போது காணக்கூடியதாக இருந்தது.