நினைவுகளை மீட்கும் வெள்ளிவிழா.

(அ . அச்சுதன்)  திருகோணமலை இ.கி.ச.ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 1998ம் ஆண்டில் உயர்தரம் கல்வி கற்று 25 ஆண்டினை நினைவு கூறும் முகமாக நினைவுகளை மீட்கும் வெள்ளிவிழா நேற்று சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
  நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்துக்கல்லூரியின்  முன்னாள் அதிபர் சி . தண்டாயுதபாணியும் , கெளரவ விருந்தினர்களா  முன்னாள்  அதிபர்  மா. இராசரெத்தினமும்  தற்போதைய இந்துக்கல்லூரியின்  அதிபர் வி. இராஜேந்திரன் அவர்களும் 1998 ம் ஆண்டில்    உயர்தரத்தில் கற்பித்த ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
 1998 ம் ஆண்டு உயர்தர பிரிவு கல்வி கற்ற மாணவர்களுடன் குடும்பத்தினரும் விழாவில்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.