நள்ளிரவில் யானைகள் காரைதீவில் அட்டகாசம்!

( வி.ரி. சகாதேவராஜா)  காரைதீவுப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்து வருகிறது.
அறுவடையை அடுத்து நேற்று முன்தினம் இரவு காரைதீவு  வயலை அண்டிய பிரதேசத்தில் சுமார் 50 யானைகள் பிரவேசித்து இருந்தன. அதில் ஒரு சில யானைகள் மக்கள் குடியிருக்கும் குடிமனை பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தன.
 இதன்போது மதில்கள் உடைக்கப்பட்டன. தென்னை வாழைகள் துவம்சம் செய்யப்பட்டன. சுமார் நான்கு வீடுகள் உடைமைகள் பயிர் பச்சைகள் சேதமாக்கப்பட்டன.
 பின்பு யானை வெடி கொளுத்தியதன் காரணமாக அவை பின் வாங்கின.
 இவ்வாறு தினமும் யானை மனித மோதல் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.