சைவ சமய வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு

வாஸ் கூஞ்ஞ) 02.09..2023

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் கல்வி மேம்பாட்டு நிதியத்தின் ஏற்பாட்டில் சைவ மாணவர்களுக்கான  போட்டிகளை அன்மையில் நடாத்தியது

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்வு ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை (31)  இடம்பெற்றது

இதில் தேவாரம் ,பேச்சுப்போட்டி,  பஞ்சபுராணம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசல்கள் வழங்கி வைக்கப்பட்டது

மேலும் தரம் 5 புலமைபரிசில் மாணவர்கள் தரம் 11 உயர் சித்திபெற்ற மாணவர்கள்  பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள்
அரச உத்தியோகம் கிடைத்தவர்களும் மதிப்பளிக்கப்பட்டார்கள்

ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் கல்வி மேம்பாட்டு நிதியமானது 2017 ஆம் ஆண்டு தொடக்கம் மிகச்சிறப்பாக செயற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய குருக்கள் ஆல நிர்வாகத்தினர்கள் கல்வி மேம்பாட்டு நிதிய நிர்வாக இயக்குனர்கள் பரிசு பெற்ற மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்