மயோன் முஸ்தபா அவர்களுக்காக (மறைவான) ஜனாஸா தொழுகை மற்றும் விசேட பிரார்த்தனை

காலஞ்சென்ற முன்னாள் உயர்கல்விப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களுக்காக (மறைவான) ஜனாஸா தொழுகை மற்றும்              விசேட பிரார்த்தனையும் சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள பெரிய பள்ளிவாயல்களில் நடைபெற்றன.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் , கல்விமான்கள் , உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வுகளில் பங்கேற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் அப்துல் நாஸர் தெரிவித்துள்ளார்.
மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா மற்றும்             குடும்ப உறவினர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.      சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகத்துடன் வர்த்தக சங்கம் இணைந்து     இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தது.
சாய்ந்தமருது பள்ளிவாயலில் நடைபெற்ற பிரார்த்தனையின்போது    பொதுமக்கள் மனமுருகி  கண்ணீர்விட்டு அழுதனர். குறிப்பாக மயோன் முஸ்தபா அவர்கள் அரசியல்வாதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் பொதுமக்களுக்கு ஆற்றியுள்ள பணிகள் தொடர்பாக பிரசங்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள்  மயோன் முஸ்தபாவின் குடும்ப உறவினர்களிடம்; கைலாகுகொடுத்து அனுதாபம் தெரிவித்தனர்.
இதேவேளை கல்முனைக்குடி பெரிய பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை மற்றும் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டன.