மட்டு ஆயித்தியமலை தூய சகாயமாதா தேவாலய பாதயாத்திரை

மட்டக்களப்பு ஆரோக்கிய மாதா தேவலாயத்தில் இருந்து  ஆயித்தியமலை தூய சகாயமாதா தேவாலயத்துக்கான பாதயாத்திரை இன்று சனிக்கிழமை (02) காலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்த பாதையாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பாதையாத்திரையாக சென்றனர்.

ஆயித்தியமலை துயா சகாயமாதா தேவாலய வருடாந்த திருவிழாவையிட்டு வருடாவருடம் மக்கள் தமது வேண்டுதலை நிறைவேற்று பாதையாத்திரையாக செல்வதுடன் மட்டு ஆரோக்கிய மாதா வேலாயத்தில் இருந்து மாதாவின் திரு உருவத்தை எடுத்துச் செல்வது வழமை.

இந்த நிலையில் வருடாந்த திருவிழாவையிட்டு இன்று மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஆயித்தியமவை பிரசேத்திலுள்ள துயா சகாயமாதா தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைக்கப்பட்டு விசேட ஆராதனை இடம்பெற்றது

இதில் அம்பாறை மட்டக்களப்பு பமாவட்டங்களிலுள்ள தேவாலய பங்கு தந்தைகள் அருட்சகோதரிகள் உட்பட பல்யாயிரக்கணக்கானோர் கரந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்