மட்டக்களப்பு மாவட்டத்தில் யூரியா உர மூடைகளில் உரம் குறைவான காணப்படுவதாக கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் சில தினங்களுக்கு முதல் மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் (DC) அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து நேற்று கரடியனாறு கமநல கேந்திர நிலையத்திற்கு (ASC) மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உன்னிச்சை திட்ட முகாமைத்துவக்குழு தலைவர் கரடியனாறு ASC தலைவர் ஆகியோர் நிலமைகளை அறிவதற்காக திடீர் கள விஜயத்தினை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் DC மற்றும்
மட்டக்களப்பில் உள்ள
தேசிய உர செயலகத்தின் (NFS) பிரதி பணிப்பாளர் ஆகியோர் உடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இந்த விஜயத்தின் நோக்கம் மற்றும் அனுமதிகளை பெற்று கரடியனாறு ASC இல் இதற்கான பொறுப்புகளில் இருந்த உத்தியோகத்தர்கள் உடன் களஞ்சிய சாலையில் உள்ள யூரியா உர மூடைகள் எழுந்தமானமாக ஐந்து அளவையிடப்பட்ட வேளையில் முறையே 46,47,48,50,51 கிலோ கிராம் இருந்ததை (தூக்கு தராசு மூலம்) நிறுக்கப்பட்டடு கண்டுபிடிக்க முடிந்தது. சராசரியாக 05 மூடைகளுக்கு 8 kg குறைவாக காணப்பட்டது.
தொடர்ந்து அங்கு களஞ்சிய சாலையில் இருப்பு பதிவேடு இருக்கவில்லை என்பதை அறியக்கிடைத்தது.
பின்னர் அலுவலகத்தில் இருந்த இருப்பு புத்தகங்கள் மற்றும் கணணிமயபடுத்தப்பட்ட பட்டியல் ஆகியவை பார்வையிடப்பட்ட நிலையில் புத்தகத்தில் உள்ள இருப்பு களஞ்சிய சாலையில் கணக்கெடுக்க கூடிய வகையில் இல்லாததது அவதானிக்கப்பட்டதுடன் பல மூடைகள் குறையாக அவிழ்க்கப்பட்டு இருந்தமையையும் அங்கு இருந்த சம்பவ திரட்டு புத்தகத்தில் (Log book) இதனை பதிவிட்டுள்ளதாக களவிஜயத்தினை மேற்கொண்வர்கள் தெரிவித்தனர்.