மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவில் மண் அகழ்வதுற்கு தடை மேச்சல் தரையில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்க உட்பட பல தீர்மானங்கள்

(க. சரவணன்) )

மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை பகுதியில் உடனடியாக பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்குமாறும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் அகழ்வு தொடர்பான தீர்வு எட்டும்வரை தற்காலிகமாக பிரதேசபை மற்றும் கிராம அபிவிருத்தி சபைகள்; உள்ளிட்ட அமைப்புக்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குமாறும், மற்றும் சோதையன்கட்டு குளப்பகுதியில் கிறவல் அகழ்வதை உடனடியாக நிறுத்துமாறு மாவட்ட அபிவித்திக் குழு கூட்டத்தில்  வியாழக்கிழமை (31) தீர்மாணம் எடுக்கப்பட்டு அதனை உடனடியாக நடை முறைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்திகுழு தலைவருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற அமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான். ஊடக மற்றும் போக்குவரத்து வீதி அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா  கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஊடக தகவல் திணைக்கள அடையாள அடை உள்ள ஊடகவியலாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டதுடன் ஏனைய ஊடகவியலாள்கள் கச்சேரிக்கு வெளியே காத்திருந்து அதிதிருப்தியை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கூட்டத்தை அமைச்சர் பந்துல குணவர்தன ஆரம்பித்து வைத்து கிழக்கில் வீதி அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்து அபிவிருத்தி தொடர்பாக உரையாற்றிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து அபிவிருத்திகுழு தலைவருமான சி.சந்திரகாந்தன் தலைமையில அடுத்த கட்ட கூட்டம் ஆரம்பித்தபோது நா.உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சந்திரகாந்தனிடம் நிரந்தரமாக ஊடக தொழிலை செய்கின்ற ஊடகவியலாளர்கள் அவர்களில் உங்களுக்கு எதிராக கதைக்கின்ற ஊடகவியலாளர்களை அனுமதிக்க வில்லை.

இருந்தபோதும் உங்களுடன் இரு ஊடகவியலாளர்கள் உள்வந்துள்ளனர் ஏன் சசி மற்றும் ஏனைய ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை அரசியல் செய்யவேண்டாம் என கேட்டுக் கொண்டார் இதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் எந்த அடிப்படையில்; 12 ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எல்லா மாவட்டத்திலும் ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதா? அடையாள அட்டை கொடுத்தவர்கள் மட்டும்தான் ஊடகவியலாள் என்ற அடிப்படையில் உள்வர அனுமதிக்கமுடியும்.

கிருஸ்னா ஊடக ஒன்றிய தலைவர் அவரே வராமல் வெளியில் நிற்கின்றார்  கொரோனா மற்றும்; பொருளாதார நெருக்கடியில் சிலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என்கின்றனர் நாங்கள் ஊடகங்களுக்கு பதில் சொல்லவேண்டும் எடுத்தவாறு தனியாக தீர்மானத்தை எடுக்கமுடியாது எங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தாh.;

அதற்கு  சந்திரகாந்தன்  நாங்கள் ஊடக அமைச்சின் தகவல் தினைக்களத்தின் அடையாள அட்டை உள்ளவர்களை மாத்திரம் உள் அனுமதித்துள்ளோம் சசி கடந்த கூட்டத்தில் ஆளுநரை மரியாதை கொடுக்காமல் மிஸ்ரர் என அழைத்ததுடன் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார் அவருக்கு தகவல் திணைக்கள அடையாள அட்டை இருந்தால் எப்பவும் அனுமதிக்க தயார் என தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

இதனை தொடர்ந்து மகாவலி காணியை நாவலடி பகுதியில் 2020 அபகரிப்பை தடுத்து வந்தேன் அதன் பின்னர் அரசாங்க அதிபர் மாவட்ட செயலகத்தைல் கடிதம் அனுப்பியுள்ளார் அந்த கடித பிரதி எனக்கோ நா.உறுப்பினர் கோ.கருணாகரனுக்கே அனுப்பபடவில்லை எனவே 3 தடவை இடம்பெற்ற சூட்டத்தில்; பிரதி அனுப்புமாறு கோரினேன் ஆனால் அனுப்பவில்லை என அராங்க அதிபரிடம் வியாழேந்திரன் கேள்வி கேட்டதுடன் அப்படி செயற்பட முடியாவிட்டால் தெரிவியுங்கள் ஏற்கனவே இருந்த அரசாங்க அதிபர் கட்சி சார்பாக செயற்பட்டார் என்றர்.

இது தொடர்பாக கிழக்கு மாணாண ஆளுநர் எதிர்வரும் காலங்களில்  எடுக்கப்படும் தீர்மான விடையங்களை உடன் பிரதி அனுப்புமாறு அரசாங்க அதிபருக்கு பணிப்புரை வழங்கியதுடன் மயிலத்தைமடு மாதவனை மேச்சல் தரை  பிரச்சனைக்கு அங்கு முதலில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்குமாறு ஏற்கனவே இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் நான் தெரிவித்து அவரும் அதற்கு உடன் செயற்படுத்துவதாக தெரிவித்தார் எனவே  ஏன் அமைக்க வில்லை ஆளுநர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேள்வி கேட்டதுடன்

திருகோணமலையில் அனைத்து இனத்தவரும் வாழும் ஒரு பிரதேசம் அங்கு தேரர்களின் செயற்பாடுபோல் ஏனைய இனத்தவர்களும்  இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்கள் ஒரு முன் உதாரணமாக செயற்படுவீர்கள் எனவே அங்கு சோதனைச்சாவடி அமைக்க கட்டிடம் மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை பிரதேச சபை செய்துதரும் உடனடியாக சோதனை சாவடியை அமைக்குமாறு பொலிஸ் அத்தியட்சகரிடம் பணிப்புரை வழங்கி அதற்கான தீர்மானிக்கப்பட்டது

அதேபோன்று மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மண் ஆகழ்வுக்காண அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு இடம்பெற்றுவந்த மண் அகழ்வை இடை நிறுத்தப்பட்டுள்ள இந்த மண் அகழ்வு பத்திரம் தொடர்பாக ஆராய்ந்து அதன் பின்னர் அதற்கு தீர்மானம் எடுப்பதாகவும் அதுவரை அபிவிருத்தி வேலைகள் மற்றும் மக்கள் வீடுகளை கட்டுவதற்காக பிரதேச சபை மற்றும் அமைப்புக்களிக்கு அனுமதிபத்திரம் வழங்குவதாகவும் சோதையன் குளகட்டில் கிறசவ் அகழ்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி உடனடியாக நிறுத்தப்படும் அங்கு மண் அகழ்வு யாரும் செய்ய முடியாது எனவும்

தனியார் கல்வி நிலையங்கள் தொட்பாக 3 கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 28 வகை உடன்படிக்கைகள் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாகவும் அடுத்த கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுப்பதாகவும் வாகரை பிரதேசத்தில் யானை வேலி மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வருவதாகவும் குடிமனைகளுக்குள் உட்புகும் யானைகளை வெளியேற்ற வனவிலங்கு திணைக்களம் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் அமைக்ப்படும் யானை வேலியை  தொடர்ந்து பராமரிப்பதற்கு வனவிலங்கு திணைக்களம் உதவி புரிவாதாக தெரிவித்ததையடுத்து தீர்மானம் எட்டப்பட்டது