கபில்வத்தையில் இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜீ ஆனந்த் !

(வி.ரி. சகாதேவராஜா)
பிரபல இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜீ ஆனந்த் , சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினருடன்  ஆதி கதிர்காமம் என அழைக்கப்படும் கபில்வத்தை  யாத்திரையில் பங்கேற்றார்.

சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான 40 பக்தர்கள் அடங்கிய குழுவினர் இதில் பங்கு பற்றுகேற்றனர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன் உப தலைவர் மனோகரன் ஏற்பாட்டில்  நமசிவாய சிவயோகி மகேஸ்வரன் சுவாமிகளின் வழிகாட்டலில்   தியாகராஜா ஜீ, சமய ஆர்வலர்களான வி.ரி.சகாதேவராஜா, கே.ஜெயசிறில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பிராந்தியங்களில் இருந்து இந்த நாற்பது அடியார்களும் பங்கேற்றிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை  இரு தினங்களும் கபில்வத்தையில் தங்கியிருந்து யாகம்,மரகதலிங்க அபிஷேகம்,நள்ளிரவு வேள்வி, உபந்நியாசம் போன்ற விசேட அம்சங்களுடன் வழிபாடியற்றினார்கள்.
நேற்று (31) அனைவரும் வீடுதிரும்பினார்கள்.