இளைஞர் யுவதிகளுக்கு தொழில் சந்தை.

(ஹஸ்பர்) திருகோணமலை மாவட்டம் , தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்காக தனியார் துறையில்  வேலை வாய்ப்ப்பினை பெற்றுக்கொடுக்கும் தொழில் சந்தை ஒன்று(29) நடாத்தப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த தொழில் சந்தையினை மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஏற்பாடு செய்திருந்ததுடன் சேவை துறை, விருந்தினர் விடுதி, தனியார் வைத்தியசாலை , நிதிசார் நிறுவனங்களின் வெற்றிடங்கள், வெளிக்கள உத்தியோகத்தர் வெற்றிடங்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பற்றிய ஆலோசனைகள் போன்ற துறைகளுக்கான நேர்முக தேர்வுகள் இடம் பெற்றதுடன் இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகைமைகளுக்கு ஏற்ப துறை சார் தொழில்களை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாக காணப்படுகிறது. இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மனிதவலு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,நிறுவனங்களின் உத்தியோகத்தர் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

PHOTO_20230829_101833.jpgPHOTO_20230829_101816.jpgPHOTO_20230829_102244.jpgPHOTO_20230829_101955.jpgPHOTO_20230829_101757.jpgPHOTO_20230829_102119.jpgPHOTO_20230829_102121.jpgPHOTO_20230829_101915.jpg