மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை தேசிய மாணவர் சிப்பாய் படை அணி  மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கல்லடி 38வது படைப்பிரிவில் இன்று (29.08.2023) நடைபெற்ற மாகாணமட்ட கனிஷ்ட தெரிவுப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.இப் பாடசாலையின் தேசிய மாணவர் சிப்பாய் படை அணி மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.ஜே. தாரிக் மற்றும் பாடசாலையின் அதிபர் எம்.எம்.எம். ஹிர்பகான் உட்பட பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்கள், பிரதி அதிபர்கள் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பாடசாலையின் கல்விச் சமூகத்தினர், பெற்றோர் அனைவருக்கும் பாடசாலை சமூகம் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

02.jfif01.jfif03.jfif04 (2).jfif