மட்டு வாகரையில் 15 வயது சிறுமி துஸ்;பிரயோகம் 18  இளைஞனுக்கு விளக்கமறியல்.

  1. (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 15வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ;பிரயோம் மேற்கொண்ட 18 வயதுடைய இளைஞன் ஒருவரைஎதிர்வரும் 7 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை (26) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 சிறுமியை காதலித்துவந்த 18 வயது இளைஞன் திருமணம் முடிப்பதாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இளைஞனை வெள்ளிக்கிழமை (25) கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இதில் கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினமான சனிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.