மட்டு வந்தாறுமூலையில் மனைவியை குத்தி கொலைசெய்து சிறையில் அடைக்கப்படவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்ற உயிரிழப்பு-

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்பிரல் மாதம் 13 ம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கோலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 23 ம் திகதி புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு  உயிரிழந்த 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.