இலங்கையில் தேசிய இளைஞர் கலந்துரையாடலினூடாக அபிவிருத்திக்காக இளைஞர்கள்

அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் முன்னெடுக்கப்படும் Youth Co:Lab தேசிய இளைஞர்
கலந்துரையாடல் ஊடாக  நிலைபேறான அபிவிருத்திக்காக இளைஞர்களின்
திறன்களை வெளிக்கொண்டுவர எதிர்பார்க்கப்படுகின்றது

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, NYSC, UNDP மற்றும் Citi ஸ்ரீலங்கா ஆகியன இணைந்து சர்வதேச இளைஞர் தினம் 2023 ஐ முன்னிட்டு ‘Growing
Green Talents’ எனும் தொனிப்பொருளில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன
24 ஆகஸ்ட் 2023: உலகளாவிய காலநிலை மாற்ற நெருக்கடிக்கு  பதிலளிப்பது மாத்திரமன்றி, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) எய்துவதற்கும்  ஏதுவான வகையில், நிலைபேறான சூழல் மற்றும் காலநிலைக்கு நட்பான உலகை நோக்கி நகர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, Youth Co:Lab இலங்கைக்கான தேசிய இளைஞர்
கலந்துரையாடல் 2023 கொழும்பில் அண்மையில் நடைபெற்றிருந்தது ‘Growing Green Talents:Unlocking Youth Potential through Upskilling for Sustainable Development’எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

. சர்வதேச இளைஞர் தினத்தை (ஆகஸ்ட் 12) குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் 150க்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்று, நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கு காணப்படும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு வலுவூட்டல் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பொது மற்றும்தனியார் துறைகளைச் சேர்ந்த பங்காளர்கள், தாக்கம் செலுத்தும் தலைவர்கள் மற்றும் சர்வதேசஅபிவிருத்தி அமைப்புகளின் அங்கத்தவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேசிய இளைஞர் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) மற்றும் Citi ஸ்ரீ லங்கா ஆகியவற்றினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும்
நிகழ்வாக Youth Co: Lab தேசிய இளைஞர் கலந்துரையாடல் (NYD) அமைந்துள்ளது. இந்தஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வை, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரஅமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் Youth Co:Lab ஆகிய இணைந்து ஏற்பாடு
செய்திருந்ததுடன், UNDP மற்றும் Citi மையம் ஆகியன இணைத்தலைமையளித்திருந்தன.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்களில் பிரதான பங்களிப்பாளர்களாகஇளைஞர்கள் திகழ்கின்றமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், உலகளாவிய
ரீதியில், வருடாந்தம் ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
2023 இளைஞர் தினத்துக்கான தொனிப்பொருளாக "Green Skills for Youth: Towards a  Sustainable World" அமைந்திருப்பதுடன், மக்கள் மத்தியில் பசுமையான திறன்கள்கட்டியெழுப்பப்படுவதில், பசுமையான உலகுக்கு வெற்றிகரமாக மாறுவது என்பது தங்கியுள்ளது
என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மற்றும்  விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச இளைஞர்தினத்தை பற்றிய வாழ்த்துச் செய்தி தெரிவிக்கையில், “சவால்களிலிருந்து மீண்டு வருவது மாத்திரமன்றி,
தேசமாக முன்னேற்றத்தை எய்தக்கூடிய நீண்ட கால நிலைபேறான அபிவிருத்திப் பயணத்தைஇலங்கை முன்னெடுக்கின்றது. எனவே, இந்த இலக்கை எய்துவதற்கு, இளம் தலைமுறையினர்கொண்டிருக்கும் ஆற்றல்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருப்பதுடன்,
பிரதானமாக கட்டியெழுப்பப்படவேண்டிய ஆற்றலாக, பசுமையான திறன்கள் என்பதைகுறிப்பிடலாம். அதனூடாக, இலங்கையை பசுமையானதாகவும், அனைவருக்கும்நிலைபேறானதாகவும் பேணப்படுவதை உறுதி செய்யலாம். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் எனும் வகையில், NYSC உடன் இணைந்து, இதர பங்காளர்களான
UNDP, Citi மையம் மற்றும் இதர தரப்பினருடன் இணைந்து, அவசியமான சகல
வாய்ப்புகளையும், கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி, இலங்கையின் இளம் தலைமுறையினர்வெற்றிகரமாக செயலாற்றவும், இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கவும் எனதுஅர்ப்பணிப்பை உறுதி செய்கின்றேன்.” என்றார்.
இலங்கையின் இளைஞர் விருத்தி நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்வதில் UNDPஇன்பங்களிப்பு தொடர்பில் இலங்கையில் UNDPஇன் வதிவிட பிரதிநிதி அசூஸா குபோட்டா கருத்துத்தெரிவிக்கையில், “தொற்றுப் பரவலின் பின்னர் மற்றும் நெருக்கடியான சூழலில், பசுமையானமற்றும் உள்ளடக்கமான சமூக-பொருளாதார மீட்சியை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் வகையில் இலங்கை காணப்படுகின்றது. பசுமையான புத்தாக்கங்கள் மற்றும் வியாபாரங்களை
முன்னெடுத்து, இலங்கை மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு காலநிலை மாற்ற அவசர நிலைக்கு செவிமடுத்து, பொருளாதாரத்தை மீட்சிப் பாதையில் வழிநடத்துவதற்கான மாற்றத்துக்கான முகவர்களாக இளம் தலைமுறையினர் செயலாற்ற முடியும். இந்த நெருக்கடியான காலப்பகுதியில்,
இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களுக்கு ஆதரவளிப்பதற்கு பசுமையான திறன்களில்முதலீடுகளை மேற்கொள்வதற்கு, புதிய பங்காண்மைகளையும் கைகோர்ப்புகளையும்ஏற்படுத்துவதற்கு மற்றும் எதிர்காலத்தை எதிர்கொள்ள தயாரான இளம் தலைமுறையினரைஉருவாக்குவதை இலக்காகக் கொண்ட திரண்ட முதலீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கையில்UNDP தயாராக உள்ளது.” என்றார்.
‘Growing Green Talents’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் இந்த நிகழ்வில்
முன்னெடுக்கப்பட்டது. இதில், பரந்தளவு துறைகளைச் சேர்ந்தவர்களின் பங்கேற்பை
அவதானிக்க முடிந்ததுடன், இலங்கையில் இளம் தலைமுறையினரிடையே பசுமையானதிறன்களை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நாட்டினுள் இளைஞர்களின் தலைமைத்துவத்தில்முன்னெடுக்கப்படும் பசுமையான அபிவிருத்தி முயற்சிகளின் வெற்றிக் கதைகளை பகிர்ந்து
கொள்ளலும் நிகழ்வில் முக்கிய அங்கம் பெற்றிருந்தன.
அவ்வாறான மாற்றத்துக்கான பங்களிப்பாளரான இளம் தலைமுறையைச் சேர்ந்த The PearlProtectors இன் ஆலோசனை தலைமை அதிகாரியான மலீஷா குணவர்தன கருத்துத்தெரிவிக்கையில், “காலநிலை மாற்றம் தொடர்பில் இளம் தலைமுறையினரிடையேவிழிப்புணர்வை மேம்படுத்தப்படுவதை அவதானிக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. தமது நுகர்வுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது முதல், சூழல் நிலைபேறாண்மையில் பங்களிப்பு
வழங்கக்கூடிய தொழில் வாய்ப்புகளில் ஈடுபடுவது வரையில் நிலைபேறான எதிர்காலத்தைநோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அவர்கள் காண்பிக்கும் ஆர்வத்தைகாண்பதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன். கடல்சார் பாதுகாப்பு தன்னார்வ செயற்பாட்டாளர்எனும் வகையில், எமது சமுத்திரங்களை பாதிக்கும் இடர்கள் தொடர்பில் அறிந்து கொள்ளஆர்வமாக உள்ள பல இளம் நபர்களை நான் சந்தித்திருந்தேன். நேர்த்தியான மாற்றத்தைஏற்படுத்துவதற்கு அவசியமான திறன்களை கட்டியெழுப்பிக் கொள்வதில் அவர்கள் ஆர்வத்தை
வெளிப்படுத்தியிருந்தனர். ஒன்றிணைந்து பணியாற்றுவதனூடாக, இளைஞர்களுக்கு மேலும் பலவாய்ப்புகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதுடன், அதனூடாக அவர்களுக்குபசுமையான தொழில்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், மாற்றத்துக்கான தலைமைத்துவம்
வகிப்பவர்களாக திகழச் செய்யவும் கூடியதாக இருக்கும்.” என்றார்.
இளைஞர்களுடன் ஈடுபாட்டைக் கொண்டிருப்பதில் அரசாங்கத்தின் பங்கு தொடர்பில்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தவிசாளர்/பணிப்பாளர் நாயகம் பசிந்து
குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச இளைஞர் தினம் 2023 ஐ கொண்டாடும்இந்தத் தருணத்தில். அபிவிருத்தியடைந்த நாடாகத் திகழ்வதை நோக்கிய பயணத்தில்தேசத்தைக் கட்டியெழுப்புவோராக எமது இளம் தலைமுறையினரை நாம் பாராட்டவேண்டும். அவர்களுக்கு அறிவு மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி, நிலைபேறான,பசுமையான மற்றும் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதில் தலைமை வகிப்போராகஎதிர்காலத்தில் இளைஞர்களை திகழச் செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம். புத்தாக்கத்தை
ஊக்குவித்து, புவியை பாதுகாப்பது, காலநிலை மாற்றத்தை தணிப்பது மற்றும்
பசுமையான மற்றும் மீண்டெழும் உலகை நோக்கிய பயணத்துக்கு அவசியமான
சாதனங்களை எமது இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். ஒன்றிணைந்து, நேர்த்தியானமாற்றத்துக்கான சக்தி வாய்ந்த செயலணியை எம்மால் உருவாக்க முடியும். அதனூடாக,எமது இளைஞர்களின் நோக்கம் மற்றும் முயற்சிகள் அனைத்தும் அனைவருக்கும்பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்து கொள்ளக்கூடியதாகஇருக்கும்.” என்றார்.
UNDP மற்றும் இளைஞர் வலுவூட்டல், சமூக தொழில்முயற்சியாண்மை, சமத்துவம் மற்றும் சமூகஉள்ளடக்கம் தொடர்பில் ஆசிய பசுபிக் மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் மாபெரும் இளைஞர்அமைப்பான Citi மையம் ஆகியன இணைந்து Youth Co:Lab
இணைத்தலைமைத்துவமளிக்கின்றன. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் 20க்கும் மேற்பட்டநாடுகளில் முன்னெடுக்கப்படும் தொடர் கலந்துரையாடல்களில் ஒன்றாக, இலங்கையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த தேசிய இளைஞர் கலந்துரையாடல் அமைந்திருந்தது. இவற்றினூடாகஇளைஞர்கள் மத்தியில் தலைமைத்துவப் பண்புகளை கட்டியெழுப்பல், புத்தாக்கம் மற்றும்தொழில்முயற்சியாண்மை திறன்களை கட்டியெழுப்பல் போன்றன தொடர்பில் பல நிகழ்ச்சிசார்
இடையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிராந்திய செயற்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் பங்காளராக தமது பணி தொடர்பில் Citi ஸ்ரீலங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர் / இலங்கைக்கான அதிகாரி ரவீன் பஸ்நாயக்க கருத்துத்தெரிவிக்கையில், “Citi மற்றும் Citi மையத்தைச் சேர்ந்த நாம், நாம் சேவையாற்றும் சமூகங்களின்பன்முகத்தன்மையை முழுமையாக பின்பற்றி இயங்குவதற்கு, எதிர்கால தலைவர்கள் சரியானதிறன்களை கொண்டிருப்பதையும் அபிவிருத்தியை பின்பற்றல் போன்றவற்றில் எம்மை

அர்ப்பணித்துள்ளோம். இலங்கையில் இளைஞர் வலுவூட்டலை நோக்கிய செயற்பாடுகளில் இளம்தலைவர்களை கட்டியெழுப்புவதிலும், பங்காளர்களை இணைந்து செயலாற்றுவதிலும் கடந்தகாலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Youth Co:Lab தேசிய இளைஞர் கலந்துரையாடல்பங்களிப்பு வழங்கியிருந்தன. இளைஞர் 2030 நிகழ்ச்சிநிரலுக்காக UNDP உடன் இணைந்து
ஆதரவளிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.
பசுமையான திறன்களின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு வெளிக்கொண்டு வந்திருந்தது.
“நிலைபேறான மற்றும் வளச் சிக்கனமான சமூகத்துக்கு ஆதரவளிப்பதற்கு, வசிப்பதற்குஅவசியமான அறிவு, ஆற்றல்கள், பெறுமதிகள் மற்றும் நடத்தைப் பண்புகள்” போன்றன அந்தத்திறன்களாக அமைந்துள்ளன. சகல வயதினருக்கும் பசுமையான திறன்கள் முக்கியத்துவம்வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், இளம் வயதினரிடையே அதன் முக்கியத்துவத்தை
வலியுறுத்துவதுடன், அவர்களால் நீண்ட காலத்துக்கு பசுமையான மாற்றத்துக்கு பங்களிப்புவழங்கக்கூடியதாக இருக்கும். உலகுடன் ஈடுபாட்டை பேணி, நிலைபேறான அபிவிருத்தியில்
செல்வாக்குச் செலுத்துவதில் முன்னரை விட தற்போது இளைஞர்கள் சிறந்த முறையில் தயாராகஉள்ளனர். புத்தாக்கமான வழிமுறைகள் மற்றும் பசுமையான சிந்தனைகளுடன் தற்காலசவால்களுக்கு பதிலளிப்பது, இளைவெளிகளை கட்டியெழுப்புவது மற்றும் அவர்களுக்குஅவசியமான உலகை உருவாக்குவது போன்றவற்றில் இளைஞர்கள் தமக்குத் தாமே, தமதுசமூகங்கள் மற்றும் சூழல்களில் தலைமைத்துவமளிக்கின்றனர்