வாகன விபத்தில் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்.

(வாஸ் கூஞ்ஞ)   மாடு வீதியின் குறுக்கே பாய்ந்ததால் வாகனம் தடம் புரண்டதில் வாகனத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டபோதும் சாரதி பயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது
தலைமன்னார் மன்னார் வீதியில் பேசாலையிலிருந்து மன்னார் நோக்கி மகேந்திரா என்ற இனம் கொண்ட வாகனம் பயணித்துக் கொண்டிருந்தபொழுது தாராபுரம் என்ற இடத்தில் இவ்வீதியின் குறுக்கே மாடுகள் பாய்ந்தபோது இவற்றிலிருந்து மீள்வதற்கு வாகனத்தை திருப்பியதும் வாகனம் பாதையின் அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த கல்லில் மோதுண்டு தூக்கி எறியப்பட்டத்தில் வாகனம் பலத்த சேதத்துக்கு உள்ளாகியது.

ஆனால் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகிய போதும் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவ் வாகனத்தில் சாரதியை தவிர்த்து வேறு எவரும் பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.