மட்டக்களப்பு மாவட்டத்தின் 14, திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட பெண்கள் சம்மேளன உறுப்பினர்கள் இதில் அனுபவங்களை முன்வைத்தனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து, கிராம மட்டத்தில் இருந்து அப் பெண்களை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றமையையும், பாலியல் வன்முறையை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உலவள ஆற்றுப்படுத்தல் , இலவச சட்ட ஆலோசனை வழங்கல் போன்றவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எஸ் அருனாழினி, திருகோணமலை மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எ.எம்.சுவர்ண தீபானி அபேசேகர,
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலிப்குமார் மற்றும் மகளிர் அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.