சிறார்கள் சுயமாக இயங்க அனுமதிக்க வேண்டும். உதவி கல்விப் பணிப்பாளர் ஞானராஜ்.

(வாஸ் கூஞ்ஞ)   முன்பள்ளி பிள்ளைகளின் நிகழ்வு என்றால் குடும்பமே அதை கண்டுக் கழித்து மகிழ்ச்சிக் கொள்ள வந்து விடுவர். ஆனால் அவர்களை அந் நிகழ்வில் சுயமாக இயங்க விடாமையால் அவர்கள் மழுங்கடிக்கப்படுகின்றனர் என மன்னார் கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் பி.ஞானராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (19) பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் சென்.மேரிஸ் சென் விக்ரறீPஸ் மற்றும் அமலதாசன் ஆகிய மூன்று முன்பள்ளி பாடசாலைகளின் மாணவர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்ட மன்னார் கல்வி வலய உதவிப் கல்விப் பணிப்பாளர் ஞானராஜ் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இந்த முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு முன்பள்ளி சிறார்களுக்கு மட்டும்தான் என நாம் எண்ணிவிட முடியாது.

மாறாக இவ்விழாவின் சிறப்பானது இச்சிறார்களின் பெற்றோர் அத்துடன் இவர்களின் குடும்ப உஙவினர்களுடைய ஒரு விழாவாகவே இவைகள் காணப்படுகின்றது.
-இங்கு பார்க்கின்றபோது இந்த சிறார்களின் பெற்றோருடன்  பாட்டன் பாட்டிகளையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

காரணம் இந்த சிறார்களின் ஒவ்வொரு செயல்பாட்டுகளையும் பெரியோர்களாகிய நாம் கண்டு களிப்பதில் ஒரு மகிழ்வைக் காணுகின்றோம் என்பதே ஒரு உண்மை.

எம்மில் பலர் தங்கள் ஐந்து வயதுகளுக்கு உட்பட்ட பிள்ளைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களை தங்களின் செயல்பாட்டுகளுக்கு இயங்க விடாமல் கட:டுப்படுத்துவதால் அவர்களின் செயல்பாடுகள் முன்னேற்றங்கள் தடைப்படுவதையும் நாம் காண்கின்றோம்.

இந்த விளையாட்டுப் போட்டியிலும் கூட சிலர் தங்கள் பிள்ளைகளை சுயமாக இயங்கவிடாது அவர்களுக்கு அருகாமையில் நின்று செயல்பட்டமையால் அவர்கள் திண்டாடியதையும் நாம் இங்கு காணக்கூடியதாக இருந்தது.

இந்த விளையாட்டுப் போட்டியில் தங்கள் பிள்ளைகளுக்கு அருகாமையில் செல்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் மிகவும் திறமையாக செயல்பட்டதையும் நான் கவனித்திருப்போம்.

ஆகவே நாம் ஒரு பிள்ளையை ஒரு நிகழ்வுக்கு இணைத்து விட்டால் அவர்களை சுயமாக இயங்க விடுவது கட்டாயமானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த பாலர் பருவத்திலுள்ள பிள்ளைகளுக்கு பின்னால் திரிவதுபோல் அவர்களின் கல்வியில் ஆறாம் ஆண்டுக்குப்பின் பாடசாலைக்கு உங்கள் பிள்ளைகளின் நிலைமையை வந்து பாருங்கள் என வருந்தி அழைத்தாலும் பெற்றோர் வராத நிலையே எமது பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது.

இது யாரிடம் அதிகமாக காணப்படுவது என்றால் இந்த சிறு வயதில் அவர்களை சயமாக இயங்க விடாதப் பிள்ளைகளே பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதும் காணக்கூடியதாக இருக்கின்றது.

சிறு பிள்ளைகளை நாம் கட:டுப்படுத்த முடியாது. அது பிள்ளைகளின் இயல்பு ஆனால் எமது மிகவும் கண்காணிப்பில் இருக்கும் இக் குழந்தைகளை நாம் இந்த வயதில் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்.

பின் அவர்கள் வளர வளர கட்டுக்கோப்புக்குள் அவர்களை ஒரு கட்டுக் கோப்புக்குள்
வளர்க்கும் பாணியில் நாம் ஈடுபட வேண்டும் என வேண்டிக் கொள்ளுகின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.