வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கிராமிய வீட்டு ஆடு வளர்ப்புத் திட்டம் 2023.

(எப்.நவாஸ்)பின்னடைவான    கிராமப்புற மக்களின்    வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான கிராமிய வீட்டு ஆடு வளர்ப்புத்திட்டம் 2023″
எனும் தொனிப்பொருளில் இரண்டாம் கட்டமாக அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆலிம் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 6 பயனாளிகளுக்கு இன்று (2023-08-22) கால்நடை (ஆடு) வழங்கும் நிகழ்வானது  பிரதேச செயலாளர் ஜனாப் T.M. முஹம்மட் அன்சார் அவர்களின் தலைமயின் கீழ் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் A.M.தமீம்,மிருக வைத்திய அதிகாரிகளான றிப்கான், சஜினா,சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.எம்.ஆகிர், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் B.சஹர்பான்,பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் K.L.தையூப், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலோடு இடம் பெற்றது.