அகம் மனிதாபிமான வளநிலையம்(AHRC ) நிறுவனம் ஜனநாயக பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சபைகள், சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை 45 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிணைப்பதன் ஊடாக சமுகத்தில் இனம்காணப்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகளை முன்மொழிந்தும் மற்றும் பிரதேச சபையின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறலை ஏற்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது இதன் அடிப்படையில் இன்று குச்சவெளி பிரதேச சபை செயலாளர் தலைமையில் பிரதேச சிவில் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என 27 பேர் கலந்து கொண்டிருந்தனர் மற்றும் இக்கலந்துரையாடலின் போது மக்கள் எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகள் முன்மொழியப்பட்டிருந்தன. குறிப்பாக பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினை, முன் பள்ளிகளின் செயற்பாடுகளிலுள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் மக்கள் குறிப்பிட்டதுடன் வீதி அபிவிருத்தி மற்றும் தொழில் இன்மை பற்றிய பிரச்சனைகளையும் சிவில் அமைப்புக்கள் முன்மொழிந்திருந்தனர்.
இதற்காக பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளும் செயற்பாட்டுகளை பிரதேச சபை சார்பாக குறிப்பிட்டு இருந்தனர். இக்கலந்துரையாடலில் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு.ஜெயவிஷ்ணு மற்றும் AHRC நிறுவனத்தின் பிரதி இணைப்பாளர் திரு மதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|