கந்தளாயில் மாடு ஒன்றை திருடிய பொலிஸ்கான்டபிள் பணியில் இருந்து இடைநிறுத்தம்–

(கனகராசா சரவணன்)   கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவர் மாடு ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படட அவரை பணியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை ( 22) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அதே பிரதேசத்தைச்சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ்கான்ஸ்டபிள் ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் கடந்த 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளர். இந்த நிலையில் அவரை திருகோணமலை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் அவரை உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.