அரசாங்க அதிபர் மற்றும் PickMe நிறுவனம் கலந்துரையாடல்.

நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் மற்றும் PickMe நிறுவனத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் தவதீசனுக்கும், மற்றும் போக்குவரத்து தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில்.

சில முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது, முக்கியமாக நல்லூர் திருவிழா வேலையில்  நல்லூர் கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்ல ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் 200 அமெரிக்க டாலர் வாங்கியுள்ளது மற்றும் ஏனைய சாரதிகள் ஒரு கட்டுப்பாடு இல்லாத கணக்கு வாங்குவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறன நிலை வரகூடாது என்ற ரீதியில் அரசாங்க அதிபரால் கட்டண மாணி பொருத்த கூறியும் சாரதிகள் அதை அலட்சிய படுத்துவதும் அதுக்கு பொறுப்பான அதிகாரிகளின் அசமந்தக போக்குதான் காரனம் என்று PickMe நிறுவனம் குற்றம்சாட்டியது அத்துடன் தமது PickMe App ஆனது அனைத்து இடங்களிலும் இருப்பதால் மக்களும் அதிகம் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். அநேகமான மக்கள் கடந்த 2 நாட்களில் 1000 பயணத்துக்கு அதிகமான அளவில் PickMe app யாழ்பாணத்தில் பவிக்கப்பட்டுள்ளது.

இதுக்கு சாரதிகள் தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று PickMe நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன் முதல் கட்டமாக பிரதேச செயலகம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழையில் நடைபெற்ற சுற்றுலா துறை தலைவர், இணை அரச அதிபர், மற்றும் முச்சக்கர வண்டி சங்கம் மற்றும் இதர போக்குவரத்து சங்கம் இணைந்து நடத்திய கூட்டத்தில் அப்பகுதி அனைவரும் PickMe app பாவிக்க இணக்கம் தெரிவித்ததுடன் அவர்களுக்கு  நிறுவன சீருடை, Taxi Light மற்றும் App பாவிக்கும் முறை அனைத்தும் வழங்க PickMe நிறுவன தலைமை அதிகாரி அ. தவதீசன் வாக்குறுதியளித்தார்.