மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தின் 140வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு குருதி கொடையாக வழங்கும் மனிதாபிமான செயற்பாடு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது(20.08.2023)
வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், வித்தியாலய அதிபர் க.அரசரெத்தினம் தலைமையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் இக்குருதி கொடையை வழங்கினர். இதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.