(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ. முஹம்மட் அன்சார் தலைமையில் (17) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட வைத்திய அதிகாரியும் மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டெக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான நியமனச் சான்றிதழ்களை யும் அடையாள அட்டைகளையும் வழங்கி வைத்தார்.
தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு பாடசாலை சுற்றுப்புறச் சூழலில் சிறப்பான முறையில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அமைச்சு பதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளரும் கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளருமான திருமதி. நஸ்மியா சனூஸ், சீ.ஐ.சி பிராந்திய விற்பனை முகாமையாளர் எம்.பி.ஏ. பௌக், உதவிக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.எம்.எம்.றியாஸ் உட்பட பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன