திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்க நிருவாக தெரிவு

ஹஸ்பர்_

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் திருகோணமலை அலஸ்தோட்டத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (19) இடம் பெற்றது.

மூவினங்களையும் சேர்ந்த ஒரேயொரு ஊடக சங்மாக கடந்த 31 வருட காலமாக இயங்கி வரும் குறித்த சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளராக  பொ.சற்சிவானந்தம் தெரிவு செய்யப்பட்டார்.
வாக்கெடுப்பு மூலமாக இவர் தலைவராக தெரிவாகியதுடன் செயலாளராக சுமேத ,பொருளாளராக ரவ்பீக் பாயிஸ் உட்பட நிருவாக குழு உறுப்பினர்களும் தெரிவாகினர். திருகோணமலை மாவட்டத்தில் மூவினங்களை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த சங்கம் திறம்பட செயற்படுவதுடன் நல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாகவும் காணப்படுகிறது.

கடந்த காலங்களில் உயிர்நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுக்கான மேலங்கிகள்,மீடியா டிரக்கரிகளும் இதன் போது வழங்கப்பட்டன.

இதன் போது உரையாற்றிய புதிய தலைவர் பொ.சற்சிவானந்தம் ஊடகர்களாகிய நாம் இந்த மண்ணில் மூவினங்களை சேர்ந்த ஒரு சங்கமாக இந்த சங்கம் மாத்திரம் காணப்படுவது இன நல்லிணக்கத்துக்கு வழி வகிக்கின்றது ஊடக உரிமைகளை வென்றெடுக்க கூடிய வாறு எதிர்காலத்தில் திறம்பட செயற்படுவோம் என்றார்.