மாமாங்கேஸ்வரர் ஆலைய திருவிழாவில்   தங்க சங்கிலிகள்  அறுப்பு.

( கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு மாமாங்கேஸ்வுருர்  ஆலைய இறுதி நாள் தீர்த உற்சவத்தில் கலந்துகொண்டு ஆலைய தரிசனதில் ஈடுபட்ட  வயது முதிர்ந்த 4 பெண்களின்  9 பவுண் தங்க சங்கிலிகள்   காணாமல் போயள்ளதாக இன்று வியாழக்கிழமை (17) முறைப்பாடு செய்துள்ளதாக  மட்டு தலைமையக பொலிசர் தெரிவித்தனர்.

குறித்த ஆலையத்தில் சம்பவதினமான நேற்று ஆலைய தரிசனத்துக்காக சென்று அங்கு அன்னதானம் மற்றும் கஞ்சிவாங்கிய கொண்ட பின்னர் கழுத்தில் அணிந்திருந்த 4 வயது முதிர்ந்த பெண்களின் 3 பவுண், 2 பவுண், 2 பவுண், 2 பவுண் உட்பட 9 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாகவும் திருடர்கள் திட்டமிட்டு அறுத்தெடுத்து போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாலணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேiளை இந்த ஆலைய தேர் மற்றும் தீர்த்த உற்றவதினமான இரு தினங்களில் 26 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் புத்தளத்தைச் சேர்ந்த ஒருவர்  கைது செய்துள்ளதுடன் மரியால் தேவாலய திருவிழாவில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்து சம்பவத்தில் கொழும்பைச் சேர்ந்த பெண் கொள்ளை குழுவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது