மன்னார் மடு விழாவில் மூவர் திடீர் மரணம்.

(வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள உலக பகழ்பெற்ற மருதமடு அன்னையின் ஆவணி மாத (15) பெருவிழாவில் சுமார் ஆறு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதில் மூன்று நபர்கள் திடீர் மரணத்துக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மன்னார் மருதமடு ஆவணி மாத பெருவிழாவில் நீண்டகாலத்துக்குப் பின் இம்முறை பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்டவர்களில் மூன்று நபர்கள் மடு ஆலயப் பகுதியில் திடீர் மரணத்தை தழுவிக் கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

மடு ஆவணி பெருவிழாவை முன்னிட்டு பத்து தினங்களும்  மன்னார் கத்தோலிக்க மீடியா ஊடாக நேரலை செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்கமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் டிறோன் (வயது 28) என்பவர் பாம்புக்கடியினாலும்

நீர்கொழும்பு பகுதியிலிருந்து மடுவுக்கு 12.08.2023 அன்று ஒரு பஸ் வண்டியில் வந்த 32 நபர்களில் ஒருவரான நீர்கொழும்பு குடாப்பாடு என்னும் இடத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணன் சிவகுமார் (வயது 44) என்பவர் மடு ஆலய வளாகத்துக்குள் தங்கியிருந்த பொழுது இரவு 10.30 மணியளவில் இருதய நோய்க்கு உள்ளாகியதும் இவரை மடுவிலிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் மரணித்துள்ளதாகவும்

இவரின் மனைவியின் மரண விசாரனையில் இவர் பழங்களைனக் கொண்டு தயாரிக்கப்படும் வடிசாராய மதுவை அருந்தி வருவதுடன் இங்கும் வரும்போது அவற்றை கொண்டு வந்து அருந்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு ஏற்கனவே ஈரல் பாதிப்படைந்த நிலையில் இருந்தமையால் இதன் நிமித்தம் மரணம் எற்பட்டுள்ளதாகவும்

அடுத்து கடந்த 05.08.2023 அன்று 25 நபர்களுடன் மடுத்திருவிழாவுக்கு வந்திருந்த யாழப்பாணம் தண்ணிர் தாங்கி குருநகர் பகுதியைச் சார்ந்த திருமதி லூயிஸ் அந்தேரிணியம்மாபிள்ளை (வயது 62) மடு ஆலய வளாகத்துக்குள் தங்கியிருந்த வேளையில் 13.08.2023 அன்று இரவு 10.30 மணியளவில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே 1990 அம்புலன்ஸ் வண்டியின் மூலம் முருங்கன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில்  மரணத்தை தழுவிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்களுடைய மரண விசாரணைகளை மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குமணகுமார் மேற்கொண்டிருந்தார்.
இறந்த இவர்களுடைய உடற்கூற்று பரிசோதனைகளுக்குப் பின் இவர்களுடைய சடலங்களை அவரவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குமணகுமார்  பொலிசாருக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.