திருகோணமலையில் இனிய நந்தவனம் சஞ்சிகை வெளியீடு.!

(ஹஸ்பர்)    வாசல் வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இனிய நந்தவனம் சஞ்சிகையின் இலங்கை சிறப்பிதழ் 20.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக அனாமிகா பண்பாட்டு மையத்தின் நிறுவுனர் பேராசிரியர் பால . சுகுமார், சிறப்பு விருந்தினராக வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் சிரேஷ;ட உதவியாசிரியர் கந்தையா சிவராசா, கௌரவ விருந்தினராக கெப்பிட்டல் வானொலியின் முன்னாள் சிரேஷ;ட நிகழ்ச்சி முகாமையாளர் தில்லையம்பலம் தரணீதரன் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில், வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ச.திருச்செந்தூரன், கவிஞர் க.யோகானந்தம், கவிஞர் தில்லைநாதன் பவித்ரன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளதுடன், திருகோணமலையை சேர்ந்த பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்கள் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.