கல்குடா கல்வி வலயத்தின் ஆலோனையுடன் இந்துக்கல்லுரி அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஓத்துழைப்புடன் பெறுப்பாசிரியர் அல்பிறின் யேசுசகாயத்தின் வழிகாட்டலில் இவ் நிகழ்வு ஓழுங்கு செய்யப்பட்டிருந்து.
தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் செங்கலடி மத்திய கல்லூரி,கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம்,கரடியநாறு இந்துவித்தியாலயம் வாழைச்சேனை இந்துக்கல்லூரி,கனிஸ்ட வித்தியாலயம் பொலநறுவை மன்னபிட்டி தமிழ் மகாவித்தியாலயம் என 6 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தனர்.இவ் நிகழ்வில் சுமார் 152 மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.இவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 15 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான வெற்றிப் பதக்கமும் சாண்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். |