கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்ட தமிழ் மொழித் தின பரிசளிப்பு விழா.

(எச்.எம்.எம்.பர்ஸான்)  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (16) பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஜே.எப்.றிப்கா, ஜே.தாஜுன் நிஸா, பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதில், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் இடைநிலைப் பிரிவில் முதலாம் இடத்தையும், ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயம் ஆரம்பப் பிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

இந்நிகழ்வின் போது, போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ்கள், நினைவுப் பரிசில்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.