“புராதன இலங்கை” எனும் தொனிப்பொருளில்  மாவடிப்பள்ளி அல்-அஷ்ரபில் கண்காட்சி.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)   மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஷ்ரஃப் மகாவித்தியாலயத்தின்  தரம் 6,7,8 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் “புராதன இலங்கை” எனும் தொனிப்பொருளில் அமைந்த கண்காட்சியொன்று (15) செவ்வாய்க்கிழமை கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் வீ.ஸம் ஸம்( SLPS)  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வரலாறு மற்றும் தகவல் தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் பி.ரீ.எம். மஃரூப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
காரைதீவு கோட்டகல்விப் பணிப்பாளர் ரீ.டேவிட் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பித்ததோடு, பிரதி அதிபர் ஏ.எல்.றஜாப்தீன் மற்றும் எம்.சி.எம்.தஸ்தகீர் உதவி அதிபர் எஸ்.எம்.அஹமட் லெவ்வை, பகுதித் தலைவர்கள் மற்றும் ஏனைய ஆசிரிய, ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்  கண்காட்சியை வரலாற்றுப் பாட ஆசிரியர்களான எஸ்.எம்.எப்.சிபாயா, எம்.எம்.எப். சிபாறா (D.O), ஜே.எம்.ரிஸ்வான் மற்றும் எம்.சமீம் ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு  அதிபர் வீ. ஸம் ஸம் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.