பெண்களுக்கான உதைபந்தாட்டத்தில் வடமாகாண சம்பியனாக யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி.

(அஸ்ஹர்  இப்றாஹிம்)    வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் மகஜனா  கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி சம்பியனாகியுள்ளது.
மகாஜனா கல்லூரி 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி இறுதி போட்டியில் அருணோதயக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு உதையில் 3:2 என்ற கோல்கள் கணக்கில் வென்று இந்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
மகாஜனா கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி தொடர்ந்து 2 ஆவது முறையாகவும் சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.