ஊடகவியலாளர் குருநாதனின் நினைவும் அவர் பற்றிய தொகுப்பும். 

(அ . அச்சுதன்)   திருகோணமலையின் ஊடகத்துறையின் ஐாம்பவானாக கருதப்படும் அமரர் சின்னையா குருநாதன் அவர்களின் 85 வது அகவை தினமதில் (11.08.2023) அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் திருகோணமலை நகராட்சிமன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் 11.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ” நானும் குருநாதனும்” எனும் ஒன்றுகூடலும் நினைவுப் பகிர்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

 இந்நிகழ்வில் திருமலையின் மூத்த ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் குருநாதன் அவர்கள் பற்றி எழுதிய தொகுப்பான ”நானும் குருநாதனும்”  எனும் நினைவேடும் வெளியிடப்படவுள்ளது.