நானுஓயாவில் கத்திக்குத்துக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

டி.சந்ரு செ.திவாகரன்

நானுஓயா பிரதான நகரில் கடந்த திங்கட்கிழமை (07) காலை இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்து  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டனர் குறித்த வர்த்தகர் இன்று புதன்கிழமை சிகிச்சை பலனின்றி காலை 10 : 40 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் வர்த்தக நிலையத்தின் வாடகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதலால் இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் வர்த்தகர் நுவரெலியா மாவட்ட வைத்திசாலையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் பல இடங்களில் கத்திக்குத்து ஆழமாக  பதிந்திருந்ததால் அதிகளவு குருதி வெளியேறியுள்ளதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 53 வயதுடைய கருப்பையா ராமசுந்தரம் நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும் , இவர்கள் இருவரும் தானாகவே நானுஓயா நிலையத்தில் சரணடைந்தமையும் குறிப்பிடத்தக்கது .
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.