வி.பிரசாந்தன்
நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்டப் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இன்றைய தினம் (09.08.2023) மாகாண மட்டத்தில் இடம்பெற்ற 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணி பல்வேறு அணிகளுடன் வெற்றி பெற்று மத்திய மாகாணத்தில் முதலாவது (Champions) இடத்தை பெற்றுள்ளது.
பாடசாலை வரலாற்றில் முதலாவது முறையாக தேசிய மட்டப் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். குறிப்பாக விளையாட்டு துறைக்கு பொறுப்பான வே.கேதீஸ் ஆசிரியரின் அதிக முயற்சியின் காரணமாகவே மாணவர்களால் இவ்வெற்றியை பெறக்கூடியதாக இருந்தது. பாடசாலையின் அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சார்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.