திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேதகு பேராயர் பிறாயன் உடைக்வே ஆண்டகைத் தலைமையிலேயே மடு விழா நடைபெறும். மன்னார் ஆயர். திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேதகு பேராயர் பிறாயன் உடைக்வே ஆண்டகைத் தலைமையிலேயே மடு விழா நடைபெறும். மன்னார் ஆயர்.

( வாஸ் கூஞ்ஞ) திருவிழா திருப்பலியானது நொன்சியோ என அழைக்கப்படும் திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேதகு பேராயர் பிறாயன் உடைக்வே ஆண்டகைத் தலைமையிலேயே ஆவணி மாதம் 15ந் திகதி நடைபெற இருக்கும்  இவ்விழா இடம்பெறும் மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஆவணி மாதம் 15ந் திகதி (15.08.2023) நடைபெற இருக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திகர் ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னையின் பெருவிழா தொடர்பாக மடு பரிபாலகர் கேட்போர் கூடத்தில் முன்னெடுக்க்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான செவ்வாய்கிழமை (09) மடுவில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்
தற்பொழுது ஆரம்பமாகியுள்ள ஆவணி மாதம் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் ஆய்த்தக் கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுக்கு அமைவாக ஆவணி மாதம் 15 ந் திகதி செவ்வாய்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி இடம்பெறும்.
தற்பொழுது இவ்விழாவை முன்னிட்டு நவநாட்கள் நடைபெற்று வருகின்றன.
திருவிழா திருப்பலியானது நொன்சியோ என அழைக்கப்படும் திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேதகு பேராயர் பிறாயன் உடைக்வே ஆண்டகைத் தலைமையிலேயே இவ்விழா இடம்பெறும்.
இங்கு வருகை தந்திருப்போர் ஏற்கனவே இங்குள்ள வீடுகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இப்பொழுது 500 மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு இங்கு மக்கள் தங்கி விழாவுக்கான நவநாட்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இவ்விழாவில் இவ்வருடம் ஏழு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இலங்கையின் பல பாகங்கலிருந்தும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இங்கு வருகை தரும் மக்களுக்கான பாதுகாப்புக்கள் மற்றும் ஏனைய வசதிகள் யாவும் திருத்திகரமாக இருக்கின்றதா என ஆராய்ந்துள்ளோம்.
மடுத்திருப்பதிக்கான ரயில் போக்குரத்தகான எற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதும் நாங்கள் ஆவணி முதலாம் திகதி ரயில் சேவை நடைபெறும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இன்னும் இதற்கான பதில் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. இருந்தும் 11 ந் திகிதி தொடக்கம் மடுவுக்கான புகையிரத சேவை நடைபெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டள்ளது.
மன்னாரில் கடுமையான வெயில் காணப்படுகின்றது. இந்த உஷ்ணத்தால் பலவித பிரச்சனைகளும் எற்பட்டாலும் அதனை நிவர்த்தி செய்வதிலும் அக்கறைக் கொண்டுள்ளோம். திருவிழா என்றும் நடைபெறுவதுபோல் சிறப்பாக நடைபெறும் என்பது எமது நம்பிக்கையாக இருக்கின்றது.
எமது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் பணிக்கால் நிறைவு பெறுவதால் இவருடைய பணிக்காலத்தில் எமது மடுத் திருப்பதிக்கு ஆற்றிய சேவைகளுக்கு இந்தநேரத்தில் அவருக்கு நாங்கள் நன்றியும் பாராட்டுக்களையும் நவிழ்ந்து நிற்கின்றோம் என இவ்வாறு மன்னார் ஆயர் இவ்வாறு தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)
IMG_0121.JPG