“மலையகம் 200” கிழக்கு செயலணி திறந்த அழைப்பு! “கிழக்கிலிருந்து மலையகம்” செயற்திட்டம் முன்னெடுப்பு.

( வி.ரி. சகாதேவராஜா)   “மலையகம் 200” என்ற செல்நெறிக்கு  இணைவாக கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 “கிழக்கில் இருந்து மலையகம்” என்ற மகுடத்தின் கீழ் இந்த புதிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டு புதிய வேலைத் திட்டங்கள் விரைவில் மாகாணம் எங்கும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது .
இலங்கை திருநாட்டின் பொருளாதார சமூக அரசியல் வளர்ச்சியில் முதுகெலும்பாக திகழ்கின்ற மலையக மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்திக்காக பல ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
“மலையகம் 200” என்பது வெறும் கொண்டாட்டமாக போய்விடக்கூடாது என்பதில் இப் புதிய செயலணி கவனம் செலுத்துகிறது.
 “கிழக்கில் இருந்து மலையகம்” என்ற செயற்றிட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு ஒத்துழைப்பு வழங்க ஆர்வம் உள்ள அமைப்புகள் தனி நபர்கள் பிரமுகர்கள்
அனைவருக்கும் பகிரங்க திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 சசி 70 601 5350 , ரியால் 76 734 0510, ஜனா  0772363956 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று இந்த புதிய செயலணி அறிவித்திருக்கின்றது.