வளவாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கென ஏழு ஆசிரியர்கள் வளவாளர்களாக அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களே வளவாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் வழங்கி வைத்தார்.

ஆரம்பக்கல்வி, விஞ்ஞானம், கணிதம், நடனம், குடியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கே இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.