வைத்தியருக்கு பிரியாவிடை

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தர முகாமைத்துவப்பிரிவின்  பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றி பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் கருத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி பிராந்தியத்தின் தரப்படுத்தலில் அதிக பங்கு வகித்த டாக்டர் பி.ஜி.பி. டேனியல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று செல்கின்றார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் அதன் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் அவரின் சேவையை பாராட்டி பிரியாவிடை வழங்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி. அப்துல் வாஜித் தலைமையில் நடைபெற்றது

பணிப்பாளர் அவர்கள் முக்கிய பணி காரணமாக கொழும்பு சென்றிருந்தாலும் இந்நிகழ்வில் நேரலை மூலமாக  தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது