வெல்லாவெளியில் குடும்பஸ்த்தர் தூக்கிட்டு தற்கொலை.

(எருவில் துசி) வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் விவேகானந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவில் குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று மாலை(07) நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அறியவருவது நான்கு பிள்ளைகளின் தந்தையான பியசேன றஜீவ்காந்தி 47 வயதுடைய இவர் எருவில் கிராமத்தில் பிறந்து வசித்து வந்த குறித்த நபர் வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரேதம் மருத்துவ பரிசோதனையின் பொருட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசைலைக்கு அனுப்பவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொள்ளுவது குறிப்பிடத்தக்கது.